நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டாறு அணைக்கு மேல் உள்ள நெய்யருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்த நிலையில் சனி ஞாயிறு ஆகிய 2 விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெய்யருவிக்குக் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.