ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 720 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியான, கர்நாடக மாநிலம் பெங்களூர் நந்திஹில்ஸ் மலையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 520 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 520 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கெலவரப்பள்ளிஅணைக்கு வரும் தண்ணீரின் அளவு, 720 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில், 720 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Exit mobile version