குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!!

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.

குறுவை சாகுபடிக்காக ஜுன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருப்பதால் ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்துவிடுகிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், செங்கோட்டையன், அன்பழகன், சரோஜா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அணையின் வலது கரையில், விழா மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், அணையின் முக்கிய பகுதிகளில் வர்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version