மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு!!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 56 ஆண்டுகளுக்கு பிறகு மின் விசை கொண்டு, மதகுகள் மூலம் இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய்களில் தண்ணீர் திறப்பால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை 137 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் . இதன்படி இன்று காலை 9.45 மணியளவில் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி. கருப்பணன், சரோஜா ,மாநிலங்களவை உறுப்பினர் சந்திர சேகரன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் ராமன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். முதல் கட்டமாக 500 கன அடியில் தொடங்கி 1,000 கன அடி வரை நீர் திறப்பு உயர்த்தப்படும். 97லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கால்வாய் திறக்க மோட்டார்
பொருத்தப்பட்டுள்ள நிலையில் மின்சக்தி மூலம் மதகுகள் திறக்கப்பட இருக்கிறது.

Exit mobile version