தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை கனிசமாக குறைந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி, கம்பத்தை அடுத்து அமைந்துள்ளது சுருளி நீர் வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி, முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. விசேஷ நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வர். இந்த நிலையில், மழை இன்மை காரணத்தாலும், தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், சுருளி அருவிக்கு வரும் நீர் கனிசமாக குறைந்தது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பிச் செல்லும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.