தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மாதம் கஜா புயலால் கனமழை பெய்தது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை, தனது முழு கொள்ளளவான 57 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 43.15 அடியாக சரிந்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 228 புள்ளி 21 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து முற்றிலும் இல்லாத
நிலையில் நீர் வெளியேற்றம் 60 கன அடியாக இருப்பதால் நீர் மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.