காவிரி கூட்டு குடிநீர் திட்ட விநியோக நிலையம் சீரமைக்கும் பணி தாமதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீர் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட விநியோக நிலையம் பழுது காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், ஒரு குடம் குடிநீருக்காக மைல் கணக்கில் நடந்து சென்று எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவிரி கூட்டு குடிநீர் நிலையத்தை விரைவில் சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version