ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ டீசர் வெளியாகியது

‘செம’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், வாட்ச்மேன், சசி படம் என அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தை ‘வாட்ச்மேன்’ படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதனை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார். இன்று (நவம்பர் 5-ஆம் தேதி) காலை வாட்ச்மேன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார். வாட்ச்மேன் படத்தின் டீசரை பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

 

Exit mobile version