கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை பாயும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்…
தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள BEWELL மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்கைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்களை தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.