தனிநபர்களின் ஆதார் தகவல்களை சேகரித்து வைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க ஆதார் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தனிநபர்களின் ஆதார் தகவல்களை சேகரித்து வைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு தொடங்க, மொபைல் இணைப்பு பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆதார் இல்லாத காரணத்துக்காக அரசு உதவிகள், சேவைகள், மறுக்கப்படாமல் இருப்பது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.