எதிரிநாட்டினுடைய கப்பல்களைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை ரஷ்ய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய கடற்படையின் வடக்கு மற்றும் பசிபிக் பிராந்திய பிரிவினரால் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் 60 கிலோ மீட்டருக்கு அப்பால், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு ஏவுகணைகள் கொண்டு வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது. மேலும் கடும் குளிரிலும் வானில் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் புதிய ரக ஏவுகணையும் பரிசோதித்து பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது