வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க கிடங்குகள்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் கிடங்குகள் அமைப்பதற்காக 120.87 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது

மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 1லட்சத்து 69 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 93 ஆயிரத்து 400 விவிபேட் இயந்திரங்களும் தேர்தல் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்க மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் கிடங்குகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 120.87 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

Exit mobile version