இந்தியா-பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் எழும் : அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது

இந்தியாவுடன் முழு அளவிலான போர் நடைபெறும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது அறிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான போர், இரண்டு நாடுகளை மட்டும் சேர்ந்ததாக இருக்காது என்றும் தெற்காசிய துணை கண்டமே இப்போரில் ஈடுபடும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது அறிவித்துள்ளார். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இத்தகைய முழு அளவிலான போரை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், சீனாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும், காஷ்மீரின் தலையெழுத்தை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும், அதனை ஐநா.சபை தீர்மானிக்க முடியாது என்று அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது தெரிவித்துள்ளார்.

Exit mobile version