விரல்களை மடக்கி படியே பின்னங்கால்களை உயர்த்தி நடந்து சிறுமி சாதனை

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த நிசிகா ஸ்ரீ என்ற சிறுமி கால்களின் விரல்களை மடக்கி பின்னங்கால்களை உயர்த்தியபடி நடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐந்து வயதே நிரம்பிய அவர் சுமார் 1.19 கிலோமீட்டர் தூரத்தை 19.19 வினாடிகளில் கடந்துள்ளார். இதற்காக திருமுல்லைவாயில் சிறப்பு காவல்படை மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறுமி நடக்கத் தொடங்கியவுடன் கூடியிருந்த அனைவரும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இவருடைய இந்த சாதனை இந்தியன் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லிம்கா மற்றும் கின்னஸ் புத்தகங்களில் இடம்பெற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சாதனை சிறுமி நிசிகா ஸ்ரீக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version