மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வியாபம் ஊழல் பாஜகவுக்கு தலை வலியாக உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க அந்தக் கட்சி போராடி வருகிறது.
இதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.