வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகின்ற 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிய வரும். மாலைக்குள் முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.