உள்ளாட்சிதேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று நிறைவு

ஊரக உள்ளாட்சிதேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று நிறைவடைகிறது..

மொத்தமுள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் , வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் 2 ம் நாளான நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டது. கிராம ஊராட்சி வார்டுகள், ஒன்றியங்கள் சிலவற்றில் மறு எண்ணிக்கை கோரப்பட்டதால், அங்கெல்லாம் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. மாவட்ட கவுன்சிலரில் 2 வார்டுக்கும், ஒன்றிய கவுன்சிலரில் 4 வார்டுக்கும் இன்னும் முடிவுகள் தெரியாமல் இருக்கிறது..  ஆகவே வாக்கு எண்ணும் பணிகள் 3 வது நாளாக இன்றும்  தொடர்கிறது..

வாக்கு எண்ணும் பணி இன்று நிறைவடைந்துவிடும் என்பதால்,  ஊரக உள்ளாட்சி தேர்தலின் ஒட்டுமொத்த முடிவுகளையும்  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  இன்று  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version