இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதிபர் தேர்தலில் சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், பதட்டமான சூழல் நிலவும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பவர்களுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது.