புதுச்சேரி , காமராஜ் நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு தொடக்கம்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காமராஜ் நகர் தொகுதியில் 17 ஆயிரத்து 47 ஆண் வாக்காளர்கள், 17 ஆயிரத்து 961 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர். நாளை நடைபெற உள்ள வாக்குப் பதிவிற்காக 32 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள், தேர்தல் பொருட்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் 1 கம்பெனி துணை ராணுவ படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு காமராஜ் நகர் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி புதுச்சேரி முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version