வாக்காளர்களை, ஏஜென்சி மூலம் வாங்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ள திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் 387.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய் கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கதவணைகளின் பணிகள் தீவிரமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருவதாகவும், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார். மேலும், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மட்டுமே தேர்தலை நிர்ணயிப்பதாகவும், வாக்களர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், என்.பி.ஆர் மூலம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெளிவு படுத்தி விட்டதால், என்பிஆர் மூலம் எந்த பாதிப்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.