விழுப்புரம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 472 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆக உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆண் வாக்காளர்களாக 13 லட்சத்து 36 ஆயிரத்து 175 பேரும், பெண் வாக்காளர்களாக 13 லட்சத்து 29 ஆயிரத்து 373 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்களாக 380 பேரும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 ஆக இருப்பதாக ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Exit mobile version