டெல்லி சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தோர்தலில் வாக்குப்பதிவு 62.59 சதவீதமாக இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்வீர் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தில் 21 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதாலும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பிற்பகலுக்குள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. எனினும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி இருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version