வாந்தி, வயிற்று போக்கால் பொதுமக்கள் பாதிப்பு

வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரியாபட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீரால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், சுகாதார துறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பொதுமக்களின் பாதிப்பை கண்டறிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சரிசெய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மகேஸ்வரன் கூறினார்.

Exit mobile version