திமுக தலைவர் மனைவியின் வீட்டை முற்றுகையிட முயன்ற தொண்டர்கள்

நாகை மாவட்டத்தில், திமுக தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டை, அக்கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழியில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 21 ஒன்றியக்குழு பதிவிகளில், திமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேட்சை வேட்பாளர்களுடன் இணைந்து, திமுக ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைபற்றியுள்ளது. திமுக சார்பாக சீர்காழி ஒன்றியக் குழு தலைவரை தேர்வு செய்வதில் அந்த கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஒருவருக்கு, ஒன்றியக்குழு தலைவர் பதவியை வழங்க, துர்கா ஸ்டாலின் சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர், தங்கள் பகுதி உறுப்பினருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவியை வழங்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர், திருவெண்காட்டில் உள்ள துர்க்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து, பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். திமுகவினரே துர்க்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version