சென்னை தாம்பரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், திமுக தொண்டர்கள் யாரும் கட்சிக் கொடியை ஏந்தாததால், அதிருப்தி அடைந்து பாதியிலேயே தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து, சென்னை தாம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வந்திருந்தார். அப்போது, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மனிதநேய கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றின் தொண்டர்கள் தங்களின் கட்சிக் கொடியை ஏந்தி நின்றனர். ஆனால் திமுக தொண்டர்கள் யாரும் கட்சிக் கொடியை கையில் ஏந்தி நிற்கவில்லை. இதனால், விரக்தியடைந்த உதயநிதி, தனது பேச்சை 15 நிமிடங்களில் முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பிரசாரத்தின் போது திமுகவினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.