மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்

மாண்புமிகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை காரைக்காலை சேர்ந்த ஒருவர் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார்.

தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் இனிப்புகள் வழங்கியும், கேக்குகள் வெட்டியும், கோவில்களில் வழிபாடுகள் நடத்தியும் அம்மாவின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடுவார்கள்.

 காரைக்காலில் அதிமுகவை சேர்ந்த அம்மாவின் விசுவாசி ஒருவர் ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்த நாளை வினோதமாக கொண்டாடி வருகிறார் அவரது பிறந்த நாளன்று எத்தனையாவது பிறந்தநாளோ அத்தனை கிலோமீட்டர்கள் நடந்து சென்று வழியிலுள்ள கோயிலில் வழிபாடு நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட விசித்திரமான தொண்டன் யார் என்று உங்களுக்கு கேட்க தோன்றும்..

அவர் தான் காரைக்கால் மாவட்டம் வேட்டைக்காரன் தெரு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் 1972ஆம் ஆண்டு தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டு கடைநிலைத் தொண்டனாக தனது கழகப் பணியை தொடங்கினார். புரட்சித்தலைவர் மறைவுக்குப் பின்னும் புரட்சித்தலைவியின் வழியில் பயணித்த இவர் இன்று வரை 48 ஆண்டுகளாக தனது பணியினைத் தொடர்ந்து அர்ப்பணிப்போடு செய்து வருகிறார்.

 இவ்வாறு இவர் அதிமுகவின் மீதும் அம்மாவின் மீதும் தீராத பற்று கொண்டதன் விளைவாக அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எத்தனையாவது பிறந்தநாளோ அத்தனை கிலோமீட்டர் தொலைவிலுள்ள மும்மத ஆலயங்களுக்கும் நடந்து சென்று அம்மா நலம் பெற வேண்டியும், மீண்டும் மீண்டும் முதலமைச்சராக வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவார்.

அம்மா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழக மக்களின் உள்ளங்களில் நிலைகொண்டு ஆட்சி செய்கிறார்கள் என்பது காரைக்கால் சுப்பிரமணியனிடம் இருந்து நம்மால் நன்கு உணர முடிகிறது. 

Exit mobile version