இத்தாலியில் எரிமலை வெடித்ததால் சிசிலி கடற்கடரையில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2-வது முறையாக புதன்கிழமை முதல் நெருப்பையும் புகையையும் கக்கி வருகிறது. புவி இயற்பியல் மற்றும் எரிமலையியலுக்கான தேசிய மையம் அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் காயமோ, உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என்றபோதும், மலையின் மீதுள்ள மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகி வருகின்றன. எரிமலை வெடிப்பால் முன்னெச்சரிக்கை காரணமாக சிசிலி கடற்கரை வழக்கமான உற்சாகத்தை இழந்து சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும், எரிமலைக்கு அருகேயுள்ள கடலில், படகுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதாக சிசிலி தீவின் அதிபர் நெல்லோ முசுமெசி (Nello Musumeci) கூறியுள்ளார்.