ரஷ்யாவில் இராண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல்களை அதிபர் புதின் கடலுக்கு அடியில் சென்று பார்வையிட்டார்.
ரஷ்யாவின் கடற்படை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக கோக்லாந்து தீவிற்கு படகு மூலம் சென்றார் ரஷ்யா அதிபர் புதின். இராண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நீர் முழ்கி கப்பல் முழ்கிய கடலின் அடிப்பரப்பிற்கு, சிறிய ரக நீர்முழ்கி கப்பல் மூலம் சென்று பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர், ரஷ்யா மக்களின் பணிகளையும், திறமைகளையும் அறிவதற்காகவே கடலில் முழ்கியுள்ள ரஷ்யா கப்பலை பார்வையிட்டதாக தெரிவித்தார். கடற்படை தின கொண்டாடத்தில் 40 கப்பல்கள் மற்றும் 4 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர்.