உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் மூலம், 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த பாஸ்போர்ட் சேவை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார்.
வரும் காலங்களில், உலகளவில் பாஸ்போர்ட் சேவையில் இந்தியா சிறந்து விளங்கும் என்றும், இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் பாஸ்போர்ட் வழங்கும் பணி துரிதமாக நடக்கும் என்றும் வி.கே. சிங் தெரிவித்தார்.