பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை விமர்சிக்கும் விதமாக நடிகர் விவேக் ஓபராய் வெளியிட்ட கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த கருத்து கணிப்பு குறித்த மீம் ஒன்றைப் பகிர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய்க்கு ரசிகர்களின் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓப்ராய் உள்ள படத்தை வாக்குக் கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா இவர்கள் இருக்கும் படத்தை வெளியிட்டு அதனை தேர்தல் முடிவுகள் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக இருந்த மீமை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என விவேக் ஓபராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்