வைட்டமின் டி குறைபாட்டை போக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டை போக்க, திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பல்வேறு பிரச்சைனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வைட்டமின் பற்றாக்குறை தொடர்பாக, பள்ளிகள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாட்டை போக்க, அனைத்து வகையான பள்ளிகளும், மாணவர்களை திறந்த வெளியில், வெயிலில் விளையாட கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. வைட்டமின் டி குறைவு உள்ள மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, தேவையான நடவடிக்கைகளை தலைமை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version