விஸ்வகர்மா சங்கத்தினர் அதிமுக வேட்பாளர்க்கு ஆதரவு

மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு, மேலூர் விஸ்வகர்மா சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜ்சத்யனுக்கு ஆதரவு தரும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்தினர், மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் முன்னிலையில் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுகவை வெற்றி பெற செய்யும்பட்சத்தில் விஸ்வகர்ம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Exit mobile version