திரைப்பட அவுடோர் யூனிட் மற்றும், கார் ஓட்டுநர் யூனியன் இடையே நடைபெற்ற கருத்து மோதலால் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது.
சென்னை வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் ,தனியார் விளம்பரதாரர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது விளம்பர படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் கேமராக்களை அவுடோர் யூனிட் , கார் ஓட்டுநர் யூனியனிடம் வழங்காமல், தயாரிப்பாளர் அனுப்பிய தனியார் கால் டாக்ஸியில் ஏற்றியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
மோதல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில், அவுடோர் யூனிட்டும், கார் ஓட்டுனர் யூனிட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போதே முன்னணி திரையுலகினர் நடித்துக்கொண்டிருந்த திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவோடு, இரவாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் இன்று படபிடிப்புகள் தொடங்கியது.
ஆனால் சிறுபட தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக பிரச்னை வருமா? என்ற அச்சத்தில் படபிடிப்பிற்கு செல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்து.
இதுபோல் முன்னறிவிப்பு இன்றி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுளளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.