அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் கொள்முதல் செய்யப்பட்டநெல் மூட்டைகள் அரசு சேமிப்பு குடோன்களில் அடுக்கப்பட்டன. அப்படி, நெய்வேலி அருகே தெற்கு சேப்ளாநத்தம் பஞ்சாயத்துக்குட்பட்ட, செங்கல் பாளையத்தில் திறந்தவெளி நெல் பாதுகாப்பு மையத்தில், சுமார் 3லட்சத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் 3மாதங்களுக்கும் மேலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சரியான தார்ப்பாய் உள்பட முறையான பாதுகாப்பு வசதியில்லாத நிலையில், தொடர்ச்சியான மழைகாரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முற்றிலுமாக வீணாகி, முளைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நெல்மணிகள் எதற்கும் பயன்படாத வகையில், கருமை நிறமாக மாறி, பூஞ்சை பூத்த நிலைக்கு சென்று விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல் மூட்டைகளை அதிகாரிகள் அலட்சியத்தால் வீணடித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version