விருத்தாசலம் அருகே வேளாண்மைதுறை சார்பில் மானாவரி திட்ட பயிற்சி முகாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள ஏ.கொளப்பாக்கம் கிராமத்தில் நல்லூர் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலக அட்மா திட்டத்தின் மூலம் மானாவாரி சாகுபடி குறித்து வேளாண்மை பயிற்சி முகாம் கொளப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இதற்கு நல்லூர் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் தங்கதுரை தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் வெங்கடலட்சுமி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்ட பயிற்சி முகாமில் மானவாரி திட்டத்தில் பயிர் சாகுபடி செய்வது குறித்து விளக்கபடத்துடன் பயிற்சி அளிக்கபட்டது.