குப்பைகளை பிரித்து உரங்களை தயாரித்தல் உள்ளிட்ட திட்டங்கள் விருத்தாசலத்தில் நிறைவேற போகிறது – தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக ஆணையர் உறுதி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் விருத்தாசலத்தில் நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் நகராட்சி நிர்வாகத்திற்கு அரசு ஒதுக்கப்பட்ட 220 கோடி நிதி மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் உட்பட 63 ஊர்களுக்கு கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை பயன்படுத்தி, விவசாயத்திற்கு உதவுதல், நகராட்சி உள்ள ஒரிரு வார்டுகள் சேர்த்து, 50 அல்லது 60 லட்சத்தில் FSTP மூலம் விவசாயத்திற்கு தேவையான குப்பைகளை பிரித்து உரங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விருத்தாசலத்தில் நிறைவேற போகிறது என்று, தமிழ் நாடு நகராட்சி நிர்வாக ஆனையர் (CMA) பிரகாஷ் IPS தெரிவித்தார்.

Exit mobile version