விருதுநகரில், தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரிய பெருமாள் திருவீதி உலா

விருதுநகரில் பிரமோற்சவ உற்சவ நாளில் தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரிய பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் 12ம் நாள் பிரம்மோற்சவம் விழா நடைபெற்றது. விழாவின் 4ம் நாளில் தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்றது. நாலாயிரத்திவ்ய பிரபந்த கோஷ்டியுடன் மாடவீதி, ரதவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Exit mobile version