டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தரவரிசை பட்டியல் வெளியீடு – நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் இடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில், விராட் கோலி, முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் தொடர் தரவரிசை பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய அணியின் கேப்டனும், நடசத்திர வீரருமான விராட் கோலி, முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 935 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 847 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த பேட்மேன்களில் ஒருவராக வலம் வரும் விராட் கோலி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகத்தில் கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அண்மையில் முறியடித்தார். இவரின் தொடர் சாதனைகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Exit mobile version