ஆர்சிபி அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலி

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் சீசனுடன், பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஆர்.சி.பி. கேப்டனாக இதுவே எனது கடைசி ஐ.பி.எல் எனக் கூறியுள்ள அவர், பணிச்சுமையைக் குறைப்பதற்காக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.சமீப நாட்களாகவே இது தனது மனதில் இருந்ததாகவும், இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் பேசியுள்ளதாகவும் வீடியோவில் கூறியுள்ள விராட் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் கடைசி ஐ.பி.எல் ஆட்டத்தில் விளையாடும் வரை ஆர்.சி.பி வீரராகவே இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். விராட்கோலியின் இந்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version