வெற்றி கணக்கை தொடங்க தீவிரம் காட்டும் விராட் கோலி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில், நடைபெறும் போட்டியில், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளை வீழ்த்தியுள்ள நிலையில், கடைசியாக டெல்லி அணியுடான போட்டியின் சூப்பர் ஓவரில் தோல்வி கண்டது.

அதேபோல், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை தான் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சொந்த மைதானத்தில் புள்ளி கணக்கை தொடங்க பெங்களூரு அணி தீவிரம் காட்டி வரும் நிலையில், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப டெல்லி அணியும் போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version