டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் விராத் கோலி

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. தோனியை பின்னுக்கு தள்ளி அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

Exit mobile version