2020ம் ஆண்டு புத்தாண்டையொட்டி, முதல் 20 ஓவர் போட்டியில் ஆடிய விராட் கோலி, புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி புனேவில் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆடிய விராட் கோலி 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணி துவக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டோது இருபது ஓவர் கிரிக்கெட்டில் மொத்தமாக 2633 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல், கேப்டன் விராட் கோலியும் 2633 எடுத்திருந்த நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை முந்தினார். மேலும், இருபது ஓவர் தொடரில் கேப்டனாக 1,000 ரன்களை வேகமாக கடந்துள்ள விராட் கோலி, சர்வதேச அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 1112 ரன்கள் எடுத்துள்ளார்.