ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விராட் கோலி

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வரை டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் ஆவர். இவர்களின் ஆட்டத்திரனை கணக்கிட்டு இந்த தேர்வு பட்டியல் நடைபெற்றுள்ளது.

இந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள்,  1 ஆல்ரவுண்டர் மற்றும் 1 சுழற்பந்து வீச்சாளர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக அதிக சதங்கள் அடித்ததன் அடிப்படையில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் 4 இங்கிலாந்து வீரர்கள், 3 ஆஸ்திரேலிய வீரர்கள், 2 தென்னாப்பிரிக்க வீரர்கள், இந்தியா, நியூசிலாந்து அணியில் தலா ஒருவர் என 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்  வெளியிட்டுள்ள கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணி வீரர்கள்:

அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லயான், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Exit mobile version