சர்வதேச அளவில் அதிக சதமடித்த 2 வது வீரர் கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 40 வது சதம் அடித்து அதிக சதம் அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில 120 பந்துகளை எதிர் கொண்டு 10 பவுண்டரிகள் உளபட 116 ரன்கள் குவித்தார் கோலி. இதன் மூலம் அவரது சதங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் அதிக சதம் அடித்த 2 வது வீரரானார். 49 சதங்கள் அடித்த இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 10 சதங்களே உள்ளன. 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான கோலி 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 691 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்ந்து ஒருநாள் போட்டியில் 887 புள்ளிகளுடன் தரவரிசையில், முதலிடத்தில் உள்ள விராட் கோலி, இந்திய வீரர்களில், அதிவேக சதமடித்த வீரர், அதிவிரைவாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர், மற்றும் குறுகிய காலத்திற்குள் 10 சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி பெற்றுள்ளார்.

இந்திய வீரர்களில், அதிவேக சதமடித்த வீரர், அதிவிரைவாக 5000 ரன்களை கடந்த வீரர், கோலி))
மேலும், ஒரு நாள் போட்டிகளில் ஆயிரம் பவுண்டரி அடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை, சச்சினுக்கு அடுத்து 31 முறை ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ள கோலி, கடந்த 2016 ஆண்டு இஎஸ்பிஎன் நிறுவனத்தின் உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 8 வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

களத்தில் ஆக்ரோஷம் காட்டக்கூடிய கோலி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவதுடன் எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பணமாக இருந்து வருகிறார்.

Exit mobile version