விண்வெளி வீரர் உடையணிந்து சாலை விழிப்புணர்வு செய்த வைரல் வீடியோ

பெங்களூருவில் சேதமடைந்த சாலையில் அனைவரின் கவனத்தையும் திருப்ப ஒருவர் எடுத்துள்ள முயற்சி அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் வரும் 7ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக, பெங்களூரில் சந்திரயான் தரை இறங்கி விட்டது என்று பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நஞ்சுண்ட சாமி என்பவர் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தனது குழுவினருடன் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விண்வெளி வீரர் போன்ற உடை அணிந்து கொண்டு, நிலவில் நடப்பதை போன்று நடந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் இந்த காட்சிகள் சாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

Exit mobile version