டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது.
டெல்லி மஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான குழுவினரும் வந்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பல்வேறு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு பிரிவினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிலையில், கோகுல்பூரி என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, ஒரு தலைமை காவலர் உயிரிழந்தார். மேலும், காவல் துணை ஆணையர் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதை அடுத்து வன்முறையை கட்டுப்படுத்த, டெல்லியின் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.