வைகோ பிரசார கூட்டத்தில் தேர்தல் விதி மீறல்

சேலத்தில் வைகோ பேசிய கூட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தியிருப்பது தேர்தல் விதி மீறல் என சர்ச்சை எழுந்துள்ளது.

சேலத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கவுசிக சிகாமணியை ஆதரித்து ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூம்பு வடிவ ஒலி பெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். விதிமுறையை மீறி வைகோ பிரசாரத்திற்கு கூம்வு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version