கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்படும் ஆபத்து
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கிய பாதிரியார் உட்பட 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மணம்பூண்டி பகுதியில், துரிஞ்சல் ஆற்றுப்பகுதியை பகுதியை ஒட்டி தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு பிராத்தனை செய்வதற்காக நேற்றிரவு 4 பேர் சென்றுள்ளனர். இதையடுத்த இரவில் கனமழை வெளுத்து வாங்கியதால், அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
இதனிடையே, நள்ளிரவு சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கிளை வாய்காலான துரிஞ்சல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுடியது. தேவாலயம் உட்பட ஆற்றங்கரையோரம் உள்ள கட்டிடங்களின் கீழ்தளங்கள் பாதி அளவிற்கு மேல் மூழ்கியது.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தேவாலயத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றபோது அவர்களும் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், 4 மணி போராட்டத்துக்கு பின் தேவாலயத்திற்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
Discussion about this post