விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் கொட்டகையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த தம்பதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விழுப்புரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக செஞ்சி சக்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த 75 வயதான ஏழுமலை, தனது மனைவியுடன், சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மின் மோட்டார் கொட்டகையில் இருந்துள்ளனர்.