"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரத்தில் 3 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

விரட்டிகுப்பம் ஏரி, கொட்டப்பாக்கத்து வேலி ஏரி மற்றும் முத்தாம்பாளையம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் அண்ணாமலை நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது.

அப்பகுதியில் உள்ள ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், 5 நாட்களாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

 

Exit mobile version